|
| சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 18:04 IST ) | |
சென்செக்ஸ் 101 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 253 புள்ளிகள் இழப்புடன் 8,840 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் லேசான முன்னேற்றமடைந்து 8,629 ஐ தொட்ட சென்செக்ஸ், பின்னர் மீண்டும் வீழ்ச்சியடைய தொடங்கியது.
பகல் 12 மணியளவில் சென்சென்க்ஸ் 319 புள்ளிகள் சரிவுடன் 8,521 ஆக காணப்பட்டது.
ஸ்டெர்லைட், மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 8 % சரிந்து காணப்பட்டன.அதேபோன்று மாருதி 5 % , ஹெச்டிஎப்சி 5.5 %, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை தலா 5 % சரிந்து காணப்பட்டன.
எஸ்பிஐ, டிஎல்எப் மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 5 % சரிந்து காணப்பட்டன.
மேலும் ரிலையன்ஸ்,ஓஎன்ஜிசி,ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்,டிசிஎஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில்,வர்த்தகம் முடிவடைவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சென்செக்ஸ் புள்ளிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதனால் சென்செக்ஸ் புள்ளிகள் இழப்பு குறைந்து, மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் இழப்புடன் 8,739 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 2,658 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|