யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008   ( 17:20 IST )
சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்வுடன் 9,163 ஆக காணப்பட்டது.

அதன் பின்னர் அதில் லேசான சரிவு ஏற்பட்டபோதிலும், பின்னர் மீண்டும் உயர்ந்து, முற்பகல் 11 மணியளவில் 203 புள்ளிகள் உயர்ந்து 9,296 ஆக காணப்பட்டது.

வங்கிகள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் தொடர்ந்து ஏற்றமுடன் காணப்பட்டன.உலோக நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் ஆட்டோ நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் தலா 6 % உயர்ந்து காணப்பட்டன. அதேபோன்று ஹெச்டிஎப்சி வங்கி 4.7 %, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.3 % உயர்ந்து காணப்பட்டன.

டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் ஆகியவை தலா 3.5 % உயர்ந்து காணப்பட்டன.டாடா ஸ்டீல், டிஎல்எப்,லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தலா 3.3 % உயர்ந்து காணப்பட்டன.ஹிண்டல்கோ மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.

ஆனால் மாருதி 3.5 %, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.

வங்கிகள், உலோக நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால், இன்றைய வர்த்தக தினத்தின் அதிகபட்ச உயர்வாக 9,237 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்.

ஆனால் மதியத்திற்கு பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்த தகவல் எட்டியதும், வங்கிகள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

இதனால் மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 253 புள்ளிகள் இழப்புடன் 8,840 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 2,683 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து சரிந்தது
சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...