|
| சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 நவம்பர் 2008 ( 18:14 IST ) | |
சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 12 புள்ளிகள் இழப்புடன் 8,903 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்வுடன் 9,161 ஆக காணப்பட்டது.பின்னர் காலை 10.05 மணியளவில் 189 புள்ளிகள் உயர்ந்து 9,092 ஆக காணப்பட்டது.
ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 5 %, ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்டரக்சர் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.
சத்யம் மற்றும் ஸ்டெர்லைட் ஆகியவை தலா 4.3 % உயர்ந்து காணப்பட்டன.
அதேபோன்று ஹெச்டிஎப்சி 4 %,விப்ரோ 3.5 % மற்றும் ஹிண்டல்கோ 3.3 % உயர்ந்து காணப்பட்டன.
ஆனால் மதியத்திற்கு பின்னர் வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிந்ததால், சென்செக்ஸ் புள்ளிகளில் வீழ்ச்சி ஏற்பட துவங்கியது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 208 புள்ளிகள் இழப்புடன் 8,696 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் இழப்புடன் 2,654 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|