யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008   ( 17:40 IST )
சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவுடன், பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் 8,915 ல் நிலை கொண்டது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வுடன் 8,841 ஆக காணப்பட்டது.பின்னர் அதில் லேசாக சரிவு ஏற்பட்டு 8,709 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது.

காலை 10.30 மணியளவில் 127 புள்ளிகள் உயர்வுடன் 9,402 ஆக காணப்பட்டது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 4 % , லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் டிசிஎஸ் தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.அதேபோன்று டாடா பவர்,எஸ்பிஐ மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.

ஏசிசி மற்றும் என்டிபிசி ஆகியவை தலா 2.5 சதவீத்ம உயர்ந்து காணப்பட்டன.

அதே சமயம் ஸ்டெர்லைட் 2.3 %, டிஎல்எப் 1.6 %, ஹெச்டிஎப்சி வங்கி 1 % சரிந்து காணப்பட்டன.

முக்கிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்த போதெல்லாம், அடுத்த சிறிது நேரத்தில் அவற்றை ஆதாயம் கருதி விற்பதும் தொடர்ந்தது.இதனால் சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாகவுமே இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 9,042 புள்ளிகளுக்கும், குறைந்த பட்சமாக 8, 701 புள்ளிகளுக்கும் இடையே ஏறி இறங்கி காணப்பட்டது.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 12 புள்ளிகள் இழப்புடன் 8,903 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் இழப்புடன் 2,708 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிட்டி குழுமத்தை காப்பாற்ற அமெரிக்கா 306 பி.டாலர் நிதியுதவி
சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...