|
| சிட்டி குழுமத்தை காப்பாற்ற அமெரிக்கா 306 பி.டாலர் நிதியுதவி |
| வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008 ( 16:39 IST ) | |
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவனமான சிட்டி குழும நிறுவனத்தை காப்பாற்ற அமெரிக்க அரசு 306 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் பெரும் நஷ்டத்தை சந்தித்து மூடப்படும் நிலைமைக்கு சென்ற பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பட்டியலில் சிட்டி குழுமமும் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே திவால் நிலைமைக்கு சென்ற ஏஐஜி மற்றும் லேமண்ட் பிரதர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கி பல லட்சம் டாலர் நிதியுதவி அளித்து அந்நிறுவனங்கள் மூடப்படாமல் காப்பாற்றியது.
இந்நிலையில், அதேபோன்ற நிலைமையை சந்தித்துள்ள சிட்டி குழும நிறுவனத்தை காப்பாற்றவும் சுமார் 306 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
சிட்டி குழுமம் உலகம் முழுவதும் 100 க்கும் அதிகமான நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், அந்நிறுவனம் நஷ்டத்தால் மூடப்பட்டால் அதன் தாக்கம் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கும் என கூறப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|