யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 17:00 IST )
சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் 8,451 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்வுடன் 8,481 ஆக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னேற்றமுடன் காணப்பட்ட சென்செக்ஸ், காலை 10.45 மணியளவில் 255 புள்ளிகள் உயர்ந்து 8,706 ஆக காணப்பட்டது.

ஸ்டெர்லைட் 5 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர்,பெல் மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.

அதேபோன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஒஎன்ஜிசி மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 4.3 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 4 % , இன்ஃபோசிஸ் மற்றும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.

ஹெச்டிஎப்சி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 3.5 % உயர்ந்து காணப்பட்டன.எஸ்பிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.

இருப்பினும் இன்றைய வர்த்தகத்திற்கு இடையே ஆதாயம் தரும் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால்,சென்செக்ஸ் 8,442 புள்ளிகள் அளவுக்கு சரிந்தது.

ஆனால் மதியத்திற்கு பின்னர் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால், சென்செக்ஸ் புள்ளிகளில் மீண்டும் ஏற்றம் காணப்பட்டது.

இந்நிலையில் மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்வுடன் 8,915 ல் நிலைகொண்டது.


இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 2,640 ல் நிலைகொண்டது.





(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் வர்த்தகம் நிறைவு
பணவீக்கம் 8.9 சதவீதமாக சரிவு
டாலர் மதிப்பு ரூ. 50 ஐ தாண்டியது
சென்செக்ஸ் 386 புள்ளிகள் வீழ்ச்சி
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...