|
| சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 12:00 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் 8,451 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்வுடன் 8,481 ஆக காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முன்னேற்றமுடன் காணப்பட்ட சென்செக்ஸ், காலை 10.45 மணியளவில் 255 புள்ளிகள் உயர்ந்து 8,706 ஆக காணப்பட்டது.
ஸ்டெர்லைட் 5 %, ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர்,பெல் மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 4.5 % உயர்ந்து காணப்பட்டன.
அதேபோன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஒஎன்ஜிசி மற்றும் ஹிண்டல்கோ ஆகியவை தலா 4.3 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 4 % , இன்ஃபோசிஸ் மற்றும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா ஆகியவை தலா 4 % உயர்ந்து காணப்பட்டன.
ஹெச்டிஎப்சி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 3.5 % உயர்ந்து காணப்பட்டன.எஸ்பிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தலா 3 % உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 87 புள்ளிகள் உயர்ந்து 2,640 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|