|
| சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 17:16 IST ) | |
சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 163 புள்ளிகள் இழப்புடன் 8,744 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 373 புள்ளிகள் இழப்புடன் 8,400 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களிலேயே 386 புள்ளிகள் சரிந்து 8,386 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.8 %, ஐசிஐசிஐ வங்கி 8.8 % மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி 4.2 % வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.
இதேபோன்று மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கடுமையாக சரிவை சந்தித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று ஏற்பட்ட வீழ்ச்சி ஆசிய பங்குச் சந்தைகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து சரிவை சந்தித்த சென்செக்ஸ், மதியத்திற்கு பின்னர் பங்குகள் விற்பனை சூடுபிடித்ததால் சரிவிலிருந்து ஓரளவு மீண்டது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 323 புள்ளிகள் இழப்புடன் 8,451 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 2,553 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|