யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் 8.9 சதவீதமாக சரிவு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 13:28 IST )
பணவீக்கம் மேலும் சரிந்து, நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.9 சதவீதமாக குறைந்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் கடந்த நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.98 சதவீதமாக இருந்தது.இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கம் காரணமாக எரிபொருள் விலை, கடந்த நவம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறைந்தது.

இதனால் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.08 சதவீதம் குறைந்து 8.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 வாரங்களில் பணவீக்கம் தற்போதுதான் இந்த அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, தற்போது 53 டாலருக்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலர் மதிப்பு ரூ. 50 ஐ தாண்டியது
சென்செக்ஸ் 386 புள்ளிகள் வீழ்ச்சி
சென்செக்ஸ் 163 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் சரிவு
ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு
சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு
மேலும் வட்டி விகிதத்தை குறைக்கிறது ரிசர்வ் வங்கி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...