|
| சென்செக்ஸ் 386 புள்ளிகள் வீழ்ச்சி |
| மும்பை (ஏஜென்சி), 20 நவம்பர் 2008 ( 11:06 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 386 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 163 புள்ளிகள் இழப்புடன் 8,744 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 373 புள்ளிகள் இழப்புடன் 8,400 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களிலேயே 386 புள்ளிகள் சரிந்து 8,386 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.8 %, ஐசிஐசிஐ வங்கி 8.8 % மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி 4.2 % வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.
இதேபோன்று மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பும் கடுமையாக சரிவை சந்தித்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று ஏற்பட்ட வீழ்ச்சி ஆசிய பங்குச் சந்தைகளுலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாக சரிந்து 2,600 என்ற நிலைக்கு சென்றது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|