|
| சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 10:48 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 354 புள்ளிகள் இழப்புடன் 8,937 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 34 புள்ளிகள் உயர்வுடன் 8,971 ஆக காணப்பட்டது.பின்னர் காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 9,127 ஆக காணப்பட்டது.
டாடா ஸ்டீல் 3.5 % , ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்,ரிலையன்ஸ் இன்ஃப்ராக்ஸ்டரக்சர் 3 % உயர்ந்து காணப்பட்டன.
ஐடிசி,ஐசிஐசிஐ வங்கி, ஸ்டெர்லைட் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை தலா 2.5 % உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 2,724 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|