|
| மேலும் வட்டி விகிதத்தை குறைக்கிறது ரிசர்வ் வங்கி |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 10:21 IST ) | |
வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் ( சிஆர்ஆர்) மற்றும் ரெபோ விகிதத்தில் 0.5 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டில் பண புழக்கத்தை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்கும் ரொக்க கையிருப்பு விகிதத்திலும், ( ரெபோ ) வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அநேகமாக அடுத்த வாரம் இந்த வட்டி குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு வட்டி குறைப்பு அமலானால் நாட்டில் மேலும் சுமார் 80,000 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|