யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 16:53 IST )
சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் இழப்புடன் 9,291 ல் நிலைகொண்டது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 9,084 ஆக காணப்பட்டது.அடுத்த சில நிமிடங்களில் அது 279 புள்ளிகள் சரிந்து 9,012 ஆக காணப்பட்டது.

ஸ்டெர்லைட் 5 % , ஏசிசி மற்றும் டிசிஎஸ் ஆகியவை தலா 4.5 % சரிந்து காணப்பட்டன.மேலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை தலா 6 % சரிந்து காணப்பட்டன.

ஹெச்டிஎப்சி, ஹிண்டல்கோ, ரிலையன்ஸ் மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.

அதேபோன்று சத்யம், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை தலா 4 % சரிந்து காணப்பட்டன.

அமெரிக்க பங்குச் சந்தையில் இன்று காணப்பட்ட கடும் சரிவின் தாக்கம், மும்பை பங்குச் சந்தையிலும் எதிரொலித்ததால், இன்றைய வர்த்தக தினம் முழுவதுமே சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 354 புள்ளிகள் இழப்புடன் 8,937 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் இழப்புடன் 2,683 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆட்டோ நிறுவனங்கள் விலைகுறைப்பு செய்ய ப.சிதம்பரம் கோரிக்கை
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிவு
சரிந்து மீண்டது சென்செக்ஸ்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு லேசான சரிவு
சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...