யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
விலைவாசி குறைய அரசு வரியை குறைக்கும் : ப. சிதம்பரம்
புதுடெல்லி (ஏஜென்சி), 18 நவம்பர் 2008   ( 12:50 IST )
ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் மற்றும் விமான நிறுவனங்கள் விலை குறைப்பு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இதற்காக கலால் வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பும், உலக பொருளாதார அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இந்த வேண்டுகோளை விடுத்த அவர்,சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்கொண்டுள்ள மேற்கூறிய துறைகளுக்கான கலால் வரியை குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார்.

ஓட்டல்கள் தங்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும்.அதேபோன்று விமான நிறுவனங்களும் விலை குறைப்பு செய்ய வேண்டும்.ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கான விலையை குறைக்க வேண்டும்.

கார் தயாரிப்பாளர்கள் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் தங்களது விலைகளை குறைக்க வேண்டும்.

சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் எந்த துறைக்கும் வரி குறைப்பு செய்வது குறித்து பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.அடுத்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்று சிதம்பரம் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 354 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 279 புள்ளிகள் சரிவு
சரிந்து மீண்டது சென்செக்ஸ்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு லேசான சரிவு
சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...