யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சரிந்து மீண்டது சென்செக்ஸ்
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 17:12 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் ரியத் தொடங்கிய சென்செக்ஸ், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது அதிலிருலிருந்து ஓரளவு மீண்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 12 புள்ளிகள் உயர்வுடன் 9,397 ஆக காணப்பட்டது.பின்னர் 9,436 ஆக உயர்ந்த சென்செக்ஸ், பின்னர் சரியத் தொடங்கியது.

காலை 10.05 மணியளவில் 159 புள்ளிகள் சரிந்து 9,226 ஆக காணப்பட்டது.ஐசிஐசிஐ வங்கி 4 % , ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை தலா 3 % சரிந்து காணப்பட்டன.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் டிஎல்எப் ஆகியவை தலா 3 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் 2.5 %, சத்யம் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தலா 2 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

ஹிண்டல்கோ மற்றும் விப்ரோ ஆகியவை தலா 2 % சதவீதம் சரிந்து காணப்பட்டன.

அதே சமயம் ஓஎன்ஜிசி 2.5 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

மதியத்திற்கு முன்னரே வங்கிகள் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் புள்ளிகளில் மளமளவென சரிவு ஏற்பட்டது.

இதனால் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கும் கீழே சென்று 8,957 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடவதற்கு முன்னதாக சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டதால் மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் இழப்புடன் 9,291 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 2,800 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு லேசான சரிவு
சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 197 புள்ளிகள் உயர்வு!
பணக்கார இந்தியர் : மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி
பணவீக்கம் 8.98 சதவீதமாக சரிந்தது
சென்செக்ஸ் 303 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...