|
| சென்செக்ஸ் 356 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 11:11 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 356 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவுடன் 14,899 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 387 புள்ளிகள் சரிந்து 14,511 ஆக காணப்பட்டது.
பின்னர் சென்செக்ஸ் புள்ளிகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதால் காலை 10.30 மணியளவில் 356 புள்ளிகள் சரிவுடன் 14,543 ஆக காணப்பட்டது.
இன்ஃபோசிஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹெச்டிஎப்சி, ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, மாருதி, சத்யம், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ மற்றும் கிராஸிம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 104 சரிந்து 4,342 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|