|
| சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 செப்டம்பர் 2008 ( 17:48 IST ) | |
சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் 14,558 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியபோது 152 புள்ளிகள் சரிவுடன் 14,413 ஆக காணப்பட்ட சென்செக்ஸ்,காலை 11 மணியளவில் 146 புள்ளிகள் சரிந்து 14,419 ஆக காணப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் ரான்பாக்ஸி, மாருதி, எஸ்பிஐ,டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக வங்கிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சென்செக்ஸ் புள்ளிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவுடன் 14,499 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 11 புள்ளிகள் சரிவுடன் 4,349ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|