யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சிங்குர் விவகாரம் : மம்தாவுக்கு மே.வ. ஆளுனர் கடிதம்
சிங்குர் விவகாரம் தொடர்பாக, மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திரிணாமுல் காங்கிரஸ் ட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆளுனர் கோபால் கிருஷ்ண காந்தி இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடித்தத்தில், சிங்குர் பிரச்சனையில் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜியின் உடல் நிலை குறித்தும் அவர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிங்குரில் போராட்டம் தொடர்ந்தால், தாங்கள் அங்கிருந்து வெளியேற நேரிடும் என மேற்கு வங்க மாநில அரசுக்கு ரத்தன் டாடா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், சிங்குரில் டாடா மோட்டார்ஸின் 'நானோ கார்' தொழிற்சாலைக்காக வழங்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மம்தா பானர்ஜி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இதையடுத்து, சிங்குரில் இருந்து நானோ கார் திட்டம் மாற்றப்படாமல் இருப்பதற்கு, மேற்குவங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு மம்தா பானர்ஜியிடம் மேற்குவங்க ஆளுனர் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, ஆளுனரின் கடிதம் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மம்தா பானர்ஜி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிங்குரில் இருந்து வெளியேற வேண்டாம் என்று டாடாவிடம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஷ்முன்ஷி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 12.40% ஆக குறைந்தது!
சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...