|
| சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிவு |
| மும்பை(ஏஜென்சி), 27 ஆகஸ்டு 2008 ( 18:05 IST ) | |
சென்செக்ஸ் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, 185.43 புள்ளிகள் சரிந்து 14,296.79-ல் நிலைகொண்டது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்வுடன் 14,482 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 81 புள்ளிகள் உயர்ந்து 14,563 ஆக காணப்பட்டது. ஆனால், பின்னர் அதில் வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது.
இன்றைய வர்த்தகத்தில் டிஎல்எஃப், எஸ்பிஐ, பெல், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா பவர், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பும் சரிந்திருந்தன.
அதேநேரத்தில் ஹிண்டில்கோ, இன்போசிஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட ஒரு சில பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தனர்.
இதனிடையே, தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 45.40 புள்ளிகள் சரிந்து 4,292.10-ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|