|
| சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிவு |
| மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 11:23 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 32 புள்ளிகள் உயர்வுடன் 14,482 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது உயர்வுடன் காணப்பட்ட சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 81 புள்ளிகள் உயர்ந்து 14,563 ஆக காணப்பட்டது.
ஆனால் பின்னர் அதில் வீழ்ச்சி ஏற்படத்துவங்கியது.காலை 10.30 மணியளவில் 54 புள்ளிகள் சரிந்து 14,428 ஆக காணப்பட்டது.
ஜெபிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஏசிசி, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
அதே சமயம் பார்தி, கிராஸிம், எஸ்பிஐ மற்றும் டிஎல்எப் ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி புள்ளிகள் சரிந்து 4,333 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|