|
| சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 25 ஆகஸ்டு 2008 ( 19:41 IST ) | |
சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது 158 புள்ளிகள் உயர்வுடன் 14,401 ல் நிலைகொண்டது.
இந்நிலையில,இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது 242 புள்ளிகள் உயர்வுடன் 14,643 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 14,672 ஆக காணப்பட்டது.
பின்னர் காலை 10.35 மணியளவில் அதில் லேசாக சரிவு ஏற்பட்டு 14, 630 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஹெச்டிஎப்சி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஏசிசி, டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ,பெல், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதாயம் தரும் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கியது.இறுதியாக மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்வுடன் 14,450 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் உயர்வுடன் 4335 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|