|
| சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு! |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 12:19 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்ந்து 14,770 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் கடந்த 14ம் தேதி மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிவுடன் 14,724ல் நிலைகொண்டது
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. 11.45 மணியளவில் 46 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 14,770 ஆக இருந்தது.
நிதி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பங்குகள் இதுவரை லாபத்தில் உள்ளன. ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் 3.7 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 2 சதவீதமும் உயர்ந்திருந்தன.
சதயம், இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் லீவர், பெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.
கிராஸிம் நிறுவன பங்குகள் பங்குகள் 3 சதவீதமும், ஹின்டால்கோ பங்குகள் 2.5 சதவீதமும் சரிந்திருந்தன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 4,433 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|