யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008   ( 12:04 IST )
'ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா'வை தங்களது வங்கியுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' (எஸ்.பி.ஐ) வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி.ஐ. வங்கியின் வழி நிறுவனமான 'ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா' வங்கியை அதன் தாய் நிறுவனத்துடனேயே இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. மத்திய அமைச்சரவையும் இதற்கு அனுமதியளித்ததை தொடர்ந்து, இணைப்பு நடவடிக்கைகளில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியானதும் இணைப்பு அமலுக்கு வரும்.

இதற்கிடையே, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' மற்றும் அதன் 7 துணை நிறுவன வங்கிகள் ஆகியவற்றின் ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் வங்கி சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், `டி-பிரிவு' பணியிடங்களை முற்றிலுமாக ஒழிக்க 6வது ஊதியக்குழு பரிந்துரை செய்திருப்பதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் 20ம் தேதி அன்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் கூட்டமைப்பும் இதில் பங்குபெறுவதாக அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என என்று தெரிகிறது.

இதன் காரணமாக நாளை மறுநாள் 20ம் தேதியும் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படவுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பணவீக்கம் 12.44% ஆக உயர்வு!
சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி
சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது : தியோரா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...