|
| சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 ஆகஸ்டு 2008 ( 11:33 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் 15,093 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே சரிய தொடங்கிய சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 186 புள்ளிகள் சரிந்து 14,906 ஆக காணப்பட்டது.
பின்னர் அது காலை 10.40 மணியளவில் 251 புள்ளிகள் அளவுக்கு சரிந்து 14,842 என்ற நிலைக்கு சென்றது.
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, மாருதி, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 65 புள்ளிகள் சரிந்து 4464 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|