|
| சென்செக்ஸ் 838 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 17:10 IST ) | |
சென்செக்ஸ் 838 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் 14,404-ல் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 482 புள்ளிகள் உயர்வுடன் 14,586 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், தொடர்ந்து முன்னேற்றமுடனேயே காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி, ஓஎன்ஜிசி, மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரசு தனது பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்ற நம்பிக்கை காரணமாகவே பங்குகளை வாங்குவதில் வர்த்தகர்களிடையே ஆர்வம் காணப்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 237 புள்ளிகள் உயர்ந்து 4,477 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|