|
| சென்செக்ஸ் 669 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 10:59 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்ற நிலையில், சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 669.25 புள்ளிகள் உயர்ந்து 14,773.45 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் 14,404-ல் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மும்பை பங்குச்சந்தையில் மிகுந்த ஏற்றம் காணப்பட்டு வருகிறது.
இதற்கு, மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரசு தனது பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்ற நம்பிக்கையே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி, ஓஎன்ஜிசி, மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தன.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 201.45 புள்ளிகள் உயர்ந்து 4,442.55 ஆக இருந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|