|
| ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 13:24 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 11 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளியன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.76 / 77 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 42.65 / 66 ஆக காணப்பட்டது.
பின்னர் நண்பகல் வர்த்தகத்தின்போது 42.65 க்கும் 42.77 க்கும் இடையே ஏறி இறங்கி காணப்பட்டது.
பங்குச் சந்தையில் காணப்பட்ட ஓரளவு சாதகமான நிலையே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு காரணம் என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|