|
| சென்செக்ஸ் 401 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008 ( 11:17 IST ) | |
சென்செக்ஸ் இன்று காலை 10.50 மணியளவில் 401.66 புள்ளிகள் சரிந்து 13,124.33 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது, அதன் குறியீட்டெண் 72 புள்ளிகள் உயர்ந்து 13,526-ல் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
இதற்கு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்டு வரும் பாதகமான நிலையின் எதிரொலியே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொள்வது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளதால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களிடம் உள்ள பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதும் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளின் மதிப்பும் சரிந்திருந்தன.
இதனிடையே தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் 4 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழாக சரிந்துள்ளது. காலை 10.52 மணியளவில் நிஃப்டி 116.65 புள்ளிகள் சரிந்து 3,913.35 ஆக இருந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|