|
| 10 பேர் பணிபுரியும் நிறுவனத்திலும் பி.எஃப்: மத்திய அரசு |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008 ( 11:58 IST ) | |
பத்து மற்றும் அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய வருங்கால வைப்பு நிதி வாரிய உறுப்பினர்களின் உயர்நிலைக் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், பத்து மற்றும் அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஐடியு தலைவரும், மத்திய வருங்கால வைப்பு நிதி வாரிய உறுப்பினருமான வரதராஜன் கூறுகையில், "இந்த திட்டத்துக்கு தொழில் நிறுவனங்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும், தொழிலாளர்களின் நலன் கருதி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
தற்போது 20 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்களில் மட்டுமே பி.எஃப் பிடித்தம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் தொகுப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து, அடுத்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|