|
| பணவீக்கம் : மக்களுக்கு விளக்கமளிக்க அரசு விளம்பரம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 5 ஜூலை 2008 ( 16:34 IST ) | |
பணவீக்கம் குறித்து பொது மக்களிடம் விளக்கம் அளிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விளம்பரங்களை வெளியிடவுள்ளது.
இந்த விளம்பரம் பணவீக்கம் அதிகரித்துள்ள மற்ற நாடுகளின் விபரங்களை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணவீக்கத்தால் அதிக அளவு பாதிக்கபடவில்லை என்பதையும் இந்த விளம்பரம் விளக்கும்.
இந்த விளம்பரங்களை செய்தி பத்திரிக்கைகள், தொலைகாட்சியில் வெளியிட, அமைச்சரவை செயலாளர் கே.எம். சந்திரசேகர் தலைமையில் நடந்த, துறை செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரபிரதேஷம், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் மாநில சட்ட மன்றங்களக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா விலைவாசி உயர்வை முக்கிய பிரச்சனையாக பிரச்சாரம் செய்தது.
மத்திய அரசு இந்த விளம்பரங்களினால் பலன் கிடைக்கும் என்று கருதும் அதே நேரத்தில், மத்திய அரசின் ஒரு துறை செயலாளர், மற்ற நாடுகளின் விலையை பற்றி, இங்குள்ளவர் ஏன் கவலைப்பட வேண்டும். பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் இந்த விளம்பரங்களால், விளம்பர நிறுவனங்கள்தான் பலன் அடைவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|