யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
வீட்டு கடன் வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ
மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 5 ஜூலை 2008   ( 16:27 IST )
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டு கடனுக்கான வட்டியை அரை சதவிகிதம் (0.05%) உயர்த்தியுள்ளது.

மாறும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) விகிதத்தில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை அரை சதவிகிதம் அதிகரித்துள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், இந்த புதிய வட்டி ஜூன் 27-ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அதன்படி, ரூ.30 லட்சம் வீட்டு கடனை, 20, 25 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வாங்கிய கடனுக்கு 11 சதவிகித வட்டி கணக்கிடப்படும். (முன்பு 10.5 %).

10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தும் கடனுக்கு ரூ.1 லட்சத்திற்கு 10.75 சதவிகித வட்டி வசூலிக்கப்படும். இதன் மாதந்திர தவணை ரூ.35 அதிகரிக்கும்.

ஐந்து வருடத்தில் திருப்பி செலுத்தும் கடனுக்கான வட்டியும் பத்து சதவிகிதத்தில் இருந்து, 10.5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர வட்டி விகித்தில் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்த்தப்படவில்லை. இது முன்பு இருந்த அளவான 12.75% சதவிகிதமாகவே தொடரும்.

தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏற்கனவே வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 விழுக்காடு அதிகரித்துவிட்டன.

ரிசர்வ் வங்கி ஜூன் 24-ம் தேதி வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிகத்தையும் உயர்த்தியது. இதை தொடர்ந்தே, வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரிப்பு
சென்செக்ஸ் 203.66 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...