|
| சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008 ( 17:53 IST ) | |
சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவுடன் 13,094 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 13, 198 ஆக காணப்பட்டது. பின்னர் 11 மணியளவில் 203.66 புள்ளிகள் உயர்ந்து 13297.77 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், பெல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வுடன் 13,454 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 4,016 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|