|
| உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 21 சதவீதம் அதிகரிப்பு |
| வியாழக்கிழமை, 8 மே 2008 ( 17:11 IST ) | |
உள்நாட்டு வாகன விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 21.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,07,263 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அது 1,30, 013 வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று உள்நாட்டு கார் விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 17.2 சதவீதம் அதிகரித்து 98,740 ஐ தொட்டுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது 84,283 ஆக இருந்தது.
மேலும் வர்த்தக வாகன விற்பனை 7.6 சதவீதம் அதிகரித்து 33, 271 ஐ தொட்டுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது 30, 914 ஆக இருந்தது.
மூன்று சக்கர வாகன உள்நாட்டு விற்பனை 5.37 சதவீதம் அதிகரித்து 26,916 ஐ தொட்டுள்ளது.இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25, 545 ஆக இருந்ததாக அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|