|
| சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு |
| மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 16:25 IST ) | |
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ,நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 17,373 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்வுடன் 17,404 ஆக காணப்பட்டது.ஆனால் ஐந்து நிமிடத்தில் ஆசியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன.
இதன் காரணமாக சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 17,269 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, லார்சன் அண்ட் டூப்ரோ , ஐடிசி, எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஓரளவுக்கு வாங்கப்பட்டதால் , சென்செக்ஸ் புள்ளிகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் 17,339 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் சரிந்து 5,136 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|