யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
கடும் வீழ்ச்சியை சந்தித்த மும்பை பங்குச் சந்தை !
மும்பை (ஏஜென்சி), 21 ஜனவரி 2008   ( 19:30 IST )
முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு, மும்பை பங்குச்சந்தையில் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் சென்செக்ஸ் 2,049.74 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்துக்குக் கீழே சென்ற நிலையில், 1,400 புள்ளிகள் சரிவுடன் மாலையில் வர்த்தகம் முடிவடைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே சென்செக்ஸ் 94 புள்ளிகள் சரிவுடன் 19, 014 ஆக காணப்பட்டது.

அதன் பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து சரிவை நோக்கி செல்லத் துவங்கி, கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 687.12 புள்ளிகள் சரிந்து 19,013.70-ல் நிலை கொண்டிருந்தது.

இந்நிலையில், முன்னணி நிறுவனப் பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து போட்டிப் போட்டு விற்றதாலும், சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவி வரும் பாதகமான நிலையின் எதிரொலியாகவும்,சென்செக்ஸ் புள்ளிகள் இதுவரை இல்லாத அளவிற்கு 4 இலக்க எண்களில் சரிந்தது.

அதிலும் பிற்பகல் 2.50 மணியளவில் சென்செக்ஸ் 2,049.74 புள்ளிகள் வரை சரிந்து, 16,963.96 என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, சிப்லா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனப் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்திருந்தன.

இந்நிலையில் மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 1, 408 புள்ளிகள் சரிந்து 17, 605 ல் நிலைகொண்டது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என்றும் வெளியான தகவலைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை இன்று மிக அதிக அளவில் விற்றதன் காரணமாக கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிப்டி 496 புள்ளிகள் சரிவுடன் 5,209 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி; 2,050 புள்ளிகள் சரிவு
ஓஎன்ஜிசி நிகர லாபம் 6.46 சதவீதம் சரிவு
இந்தியாவில் 6 பில்லியன் டாலர்கள் முதலீடு : வோடாஃபோன்
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி; 1,040 புள்ளிகள் சரிவு
சத்யம் நிகரலாபம் 28.58 சதவிகிதம் உயர்வு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace