யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
அருமருந்தாகும் அருகம்புல்!
எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது.

முழுமுதற்கடவுளான விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல் கருதப்படுகிறது. ஆனால், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து உட்கொண்டால் உடல் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைபடுத்த வேண்டும்.

பின்னர் அருகம்புல்லுடன் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்கு கிடைக்கிறது. காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.

சேலம் ஜங்சன், உழவர் சந்தை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் கூட அதிகாலை நேரங்களில் அருகம்புல்சாறு கன ஜோரில் விற்பனையாவதைப் பார்க்கலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழி..
நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உயர் ரத்த அழுத்தமா?
நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...
கோடை வெப்பத்தை தணிக்க...
பா‌ர்வையை ப‌றி‌க்கு‌ம் ‌க்ளு‌க்கோமா
செய்திகள்
தமிழகம் - ராமே‌ஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காஞ்சிவரம் - விமர்சனம்
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்...
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...
மேலும் படிக்க|மேலும்...