யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை மிகவும் எச்சரிக்கையாக கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கான சில வழி முறைகளைப் பார்ப்போம்.

* நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம்.

* தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும். குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். பிரசவ காலத்தில் சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.

* மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. வேலை செய்தாலும் மிகவும் சாதாரணமாகவும் அமர்ந்த நிலையில் தான் வேலை செய்ய வேண்டும்.

* வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

* குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை அணியாதீர்கள். அதிகமான நகைகளையும் அணிந்திருக்காதீர்கள்.

* எப்போதும் ஒருவரது துணையுடன் இருங்கள். எங்கே செல்வதாக இருந்தாலும் ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். வெகு தூரப் பிரயாணத்தை தவிர்த்துவிடுங்கள்.

* இறுக்கமான ஆடைகளை நிச்சயமாக அணியக் கூடாது. உங்களது உடல் உறுப்புகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* குளிக்கும் போது மார்பகக் காம்புகளில் வரும் சிறு பருக்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு சுடு தண்ணீரில் கழுவி விடுங்கள்.

* உ‌ங்களு‌க்கு கொடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌பிரசவ தே‌தி‌க்கு 2 நா‌ட்களு‌க்கு மு‌ன்னரே மரு‌த்துவமனை‌க்குச‌் செ‌ன்று‌விடு‌ங்க‌ள்.

* பிரசவ தே‌தி வரை வ‌யி‌ற்று வ‌லி இ‌ல்லாம‌ல் இரு‌ந்தா‌ல் மருத்துவரை அணுகுங்கள்.
சிலரு‌க்கு ‌பிரசவ வ‌லியே வராம‌ல் இரு‌க்கு‌ம். ஆனாலு‌ம் குழ‌ந்தை ச‌ரியான இட‌த்‌தி‌ற்கு வ‌ந்து‌விடு‌ம். எனவே மருத்துவரை நாடுகள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோடை வெப்பத்தை தணிக்க...
பா‌ர்வையை ப‌றி‌க்கு‌ம் ‌க்ளு‌க்கோமா
வாயுத் தொல்லையால் அவதியா?
வயிற்றுப்புண் குணமாக...
மூட்டு வலியை குணப்படுத்த...
அழகு சாதனங்கள் ஆபத்தானவையா?
செய்திகள்
தமிழகம் - 10‌ ‌ம் வகு‌ப்பு தே‌ர்‌வி‌ல், ஊனமு‌ற்றோரு‌க்கு ஒரு ம‌ணி நேர‌ம் கூடுதலாக ஒது‌க்க த‌மிழக அரசு‌ தே‌ர்வு‌த்துறைக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
1977 - விமர்சனம்
கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!...
யாவரும் நலம் - விமர்சனம்
தீ – விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன...
மேலும் படிக்க|மேலும்...