யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
ஏசி அறை: ஜில்லென ஒரு ஆபத்து
இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில், அலுவலங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டருக்கு ஏசி தேவைப்படுகிறது. அதனால் ஏசி இல்லாத அலுவலங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

எனினும் ஒருசில அலுவலகங்களில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இது உடலுக்கு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்.

வெளியில் உள்ள தட்ப வெப்பத்துக்கு பழகிப் போன நம் உடல், அலுவலகத்தில் குளிர்ந்த தட்ப வெப்பநிலையையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் உடலில் சில அசவுகரியங்கள் நேரிடலாம்.

அலுவலகத்தில் ஏசி முறையாகப் பராமரிக்கப்படாததாலும் அவ்வப்போது சுத்தப்படுத்தாததாலும், அவை பாக்டீரியா வாழும் இடங்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அலுவலக ஏசி அறைக்குள் புகை பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களோ வந்து சென்றால், அவர்கள் மூலம் தொற்றுக் கிருமிகள் அறைக்குள் பரவ வாய்ப்புள்ளது.

தரை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்களில் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள், வெளியே செல்லாமல் நம் மீது பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் காய்ச்சல், இருமல், நிமோனியா, தலைவலி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு, சாதாரண நோய்யைப் போலவே சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய சுகாதாரக் கேடுகள் தொடர்ந்தால், உடலில் பெரிய தாக்கத்தை அவை ஏற்படுத்தக்கூடும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வீட்டில் பிரசவம் பார்க்கலாமா?
அஜீரணத்தை போக்கும் இஞ்சி
கொசுக்களால் பரவும் யானைக்கால் நோய்
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்!
மழை நேரத்தில் என்ன சாப்பிடலாம்?
உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமாவா?
செய்திகள்
தேசியம் - மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவனான அஜ்மலுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வராத நிலையில், தாம் வாதாட தயாராக உள்ளதாக மகாராஷ்ட்ரா முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஜனார்தன் தெரிவித்து...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
நலம் காக்க - குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்கள், சுகாதார விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்...
மேலும் படிக்க|மேலும்...