யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
கொசுக்களால் பரவும் யானைக்கால் நோய்
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் நோய்களில் ஒன்று யானைக்கால் நோயும் ஒன்று.கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

இதற்கான வழிமுறைகளை தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ். அமுதகுமார், தான் எழுதியுள்ள "பயனுள்ள மருத்துவ குறிப்புகள்" என்ற புத்தகத்தில்!

Dr.Amudha Kumar
WD
யானைக்கால் நோயானது 'ஊச்செரேரியா போன்கிரப்டி' என்ற ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது. கடலோரப் பகுதிகள்,கிராமங்கள், நதிக்கரையோரங்களில் இந்த நோய் அதிகம் காணப்படுகிறது.

ஒருவரிடம் இருந்து இந்த நோய் மற்றொருவருக்குப் பரவுதற்கு கொசுக்கள் தான் முக்கிய காரணம். இந்நோய் பாதித்த ஒருவரின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுவின் வயிற்றுக்குள், ஊச்செரேரியா போன்கிரப்டி ஒட்டுண்ணிப் புழுக்களும் செல்கின்றன.

சுமார் ஒரு மாதத்திற்குள் அந்த புழுக்கள் கொசுவின் வயிற்றில் வளர்த்து, சின்ன சின்ன புழுக்களாக மாறுகின்றன. அந்த கொசு இன்னொருவரைக் கடிக்கும்போது ரத்தம் வழியாக அவரது உடலுக்குள் இப்புழுக்கள் சென்றுவிடுகின்றன. இவ்வாறு தான் யானைக்கால் நோய் எளிதாகப் பரவுகிறது.

எனவே முதலில் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது தான், இந்த நோயைக் தடுக்கும் முதல் வழி. வீட்டையும், அதன் சுற்றுப் புறங்களையும் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக வீட்டைச் சுற்றி அசுத்த நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களில் குப்பைகளை சேர விடக்கூடாது.

உங்கள் வீட்டைச் சுற்றிலும் கொசு அதிகம் இருந்தால் நகராட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கு தகவல் சொல்லி, கொசு மருந்து தெளிக்கச் செய்யலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பற்களை பாதுகாக்க எளிய வழிகள்!
மழை நேரத்தில் என்ன சாப்பிடலாம்?
உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமாவா?
தலைவலிக்கு கை வைத்தியம் பலன் தருமா?
நினைத்த நேரத்துக்கு சாப்பிடலாமா?
'இன்குபேட்டர்' குழந்தைகளுக்கு மனஅழுத்தம் குறைவு!
செய்திகள்
தேசியம் - வரும் ஏப்ரல்- மே மாதங்களில் மக்களைத் தேர்தல் நடைபெறலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலஸ்வாமி தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது...
மேலும் படிக்க|மேலும்...