|
| நினைத்த நேரத்துக்கு சாப்பிடலாமா? |
சிலர் பார்க்கும் உணவுப் பொருட்களையெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பார்கள். இது ஆபத்தில் போய் முடியும்.
உணவே மருந்து என்பது நமது முன்னோர்களின் வாக்கு. சாப்பிடுவதில் உங்களுக்கென்று சில வரைமுறைகளை இப்போதே ஏற்படுத்திக் கொண்டு, அதன்படி நடந்தால் என்றும் எந்த சிக்கலும் இடமில்லை.
நாவின் சுவைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உடலியக்கத்துக்கு தேவையான சத்து நிறைந்த உணவுவகைகளை தேர்வு செய்ய வேண்டும்.
உணவு வகைகளில் எது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கொண்டவை, எவை கொழுப்பு அதிகம் நிறைந்த பண்டங்கள் என்பதை அறிந்து, தேவையில்லாதவற்றை நீக்கிவிட வேண்டும்.
'பசித்த பின் புசி' என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். பசிக்காமல் சாப்பிடுவது அஜீரணம், வயிற்றுக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்திவிடக்கூடும்.
ஊறுகாய், அப்பளம், கார சிப்ஸ் வகைகள், எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக கலோரி இல்லாத பானங்களை பருக வேண்டும். எதையாவது சிந்தித்துக் கொண்டோ, மன உளைச்சலுடனோ சாப்பிடுவது நல்லதல்ல. சிலர் புத்தகம் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதையும், அல்லது டிவி பார்த்தபடி உண்பதை பார்த்திருக்கிறோம். இது முற்றிலும் தவறானது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|