|
| 'இன்குபேட்டர்' குழந்தைகளுக்கு மனஅழுத்தம் குறைவு! |
பிறந்தவுடன் `இன்குபேட்டர்' வைக்கப்படும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, பிரசவம் முடிந்ததும் தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து வைப்பதால், பின்னாளில் மன அழுத்தம் ஏற்படும் என்று முன்னர் கூறப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது 'இன்குபேட்டர்' எனப்படும் போதிய தட்பவெப்பநிலை பெட்டியில் குழந்தையை பாதுகாப்புடன் வைப்பதால், அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு, மற்ற குழந்தைகளை விட 3 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 1986ஆம் ஆண்டு முதல், ஆயிரத்து 212 குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவர்களில் 16.5 சதவீதத்தினர் இன்குபேட்டரில் வைக்கப்பட்டவர்கள். இவர்களில் 5 சதவீத குழந்தைகள் மட்டுமே தங்களது 21 வயதில் மன அழுத்தத்திற்கு ஆளாகினர்.
ஆனால், இன்குபேட்டரில் வைக்கப்படாதவர்களில் 9 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர்.
பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரித்து வைக்கப்படும் குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்படும்போது, அதன் உடலின் வெப்பநிலை, மூளைக்கு ஆக்சிஜனேற்றம், ஒலி மற்றும் ஒளி போன்றவை சீராக இயக்குவதால் நரம்பு வளர்ச்சி ஆரோக்கியமாக உள்ளது.
இதன் காரணமாக, அந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது மனஅழுத்த்தில் சிக்காமல் தப்பிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|