யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
பாடாய்ப்படுத்தும் தலைவலி
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு தலைவலி நம்மை பாடாய்படுத்தி விடுகிறது.

தூக்கமின்மை, பசி, உடல் களைப்பு, இரவில் கண் விழித்துப் படித்தல், கண் பார்வையில் குறைபாடு போன்றவை தலைவலி ஏற்படக் காரணமாக உள்ளன.

சிலருக்கு காலையில் வழக்கமாக சாப்பிடும் நேரம் தாண்டிவிட்டால் போதும், டென்ஷனுடம் இருப்பார்கள். தலைவலியால் காலை நேரத்திலேயே நம்மீது எரிந்து விழுவார்கள். கொஞ்சம் சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு தாமதமாகச் சாப்பிட்டாலும் கூட தலைவலி நிற்பதில்லை.

இன்னும் சிலருக்கோ குளிர்பானம் குடித்தாலோ, ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ கூட தலைவலி ஏற்பட்டு, அவர்களின் நாவை அடக்கி வைத்துவிடுகிறது. எனவே இன்ன காரணங்களால் தான் தலைவலி ஏற்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

பொதுவாக தலைவலிக்கான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நாம் செயல்பட்டு, அதைக் குணப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு தூக்கம் இல்லாததால் தலை வலிக்கிறது என்றால் கொஞ்ச நேரம் உறங்கி எழுந்தால் தலைவலி போயே போச்சு.

உரிய நேரத்தில் டீ, காபி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு தலைவலிப்பதாகத் தோன்றும். அந்த நேரத்தில் அவற்றைப் பருகி தலைவலியைப் போக்கி, புத்துணர்வு பெறலாம்.

ஆனால், நாள் முழுவதும் நீடிக்கும் தலைவலி, பார்வைக் கோளாறால் ஏற்படும் தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவற்றை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. தலைவலி தானே என்று நாமாக சுய வைத்தியம் செய்து ஆபத்தில் முடியும்.

இத்தகைய தலைவலிக்கு உடனே உரிய மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதே சிறந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீபாவளி பலகாரம்: புளிச்ச ஏப்பம் குணமாக...
உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை?
தூக்கம் கெட்டு வேலை செய்கிறீர்களா?
உடல் எடையை குறைக்கும் 'டிடாக்ஸ்' கருவி!
முதுகு வலிக்கு காரணமாகும் இருக்கைகள்
ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...