யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தீபாவளி பலகாரம்: புளிச்ச ஏப்பம் குணமாக...
தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டாலும், பலகாரங்கள் இன்னும் பல வீடுகளில் மிச்சமிருக்கும்.

அதை சாப்பிடவும் முடியாமல், பிறருக்கு கொடுத்துவிடவும் மனம் இல்லாமல் சிலர் படும் அவஸ்தை இருக்கிறதே, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது!.

காரணம், அளவுக்கு அதிகமாக பலகாரங்கள் சாப்பிட்டதால் உருவான புளித்த ஏப்பம்தான்.

வீட்டில் செய்த முறுக்கு, அதிரசம், மிக்ஸர், மைசூர்பாகு, வடை, பஜ்ஜி, சொஜ்ஜி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பிடி பிடித்ததில், இந்த புளிச்ச ஏப்பம் உருவாகி வயிறு மந்தமாகி இருக்கும்.

இதனால் பசியின்மையும் ஏற்பட்டு, வழக்கமான காலை டிபன் கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இதை குணப்படுத்த ஓர் எளிய வைத்தியம்.

முதலில் புளிச்ச ஏப்பம் வந்தவுடனேயே பதார்த்தங்களை மேலும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். (கொஞ்சம் சிரமமான காரியம்தான். வேறு வழியில்லை)

பின்னர், பால் அல்லது தண்ணீரில் சற்று வெல்லம் கலந்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து இளம் சூட்டில் இறக்கி, ஒரு தம்ளர் அளவுக்கு குடித்தால் புளிச்ச போயே, போய்விடும்.

இதன் பின், சுமார் 2 மணி நேரம் கழித்து இட்லி, இடியாப்பம் போன்ற நீராவியில் வேக வைத்த உணவு வகைகளை சிறிது சாப்பிட்டால், வயிறு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை?
தூக்கம் கெட்டு வேலை செய்கிறீர்களா?
உடல் எடையை குறைக்கும் 'டிடாக்ஸ்' கருவி!
முதுகு வலிக்கு காரணமாகும் இருக்கைகள்
ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!
அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...