யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
முதுகு வலிக்கு காரணமாகும் இருக்கைகள்
அலுவலகத்தில் பணி புரிவோர் தங்களின் வேலை பளுவுக்கு மத்தியில் தலைவலி, முதுகுவலி போன்ற மற்ற தொந்தரவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

தலைவலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலானோரை அதிகம் பாதிப்பது முதுகுவலி தான்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் அமரும் இருக்கை தான்.அதுசரி, லுவலகத்தில் கிடைக்கும் இருக்கையில் தானே அமர முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் அது தவறு.

மேலதிகாரிகளிடம் கூறி, அவரவர் உடல் வாகுக்கேற்றவாறு இருக்கைகளை தேர்ந்தெடுத்து அதில் தான் அமர வேண்டும்.

என்னென்ன கவனிக்க வேண்டும்?

இருக்கையை தேர்வு செய்யும்போது, பொதுவாக அவை வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.கைகளை வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

நமக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்ததும், அதில் உட்கார்ந்து பார்த்து, அதற்கேற்றவாறு அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கூடுமானவரை நாம் பயன்படுத்தும் இருக்கையை மற்றவர்கள் உபயோகத்திற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.அவர்கள் அதில் அமருவதால், அதன் அமைப்புகள் மாறுபட்டு, அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இருக்கையில் அமரும்போது முதுகு நன்றாக சாய்ந்திருக்கும்படியும்,முழங்கால் வரை இருக்கையில் பதிந்திருக்கும்படியும் பார்த்துக் கொள்வது நல்லது.

அதேபோல் கணினிக்கு மிக அருகிலோ, அல்லது மிகவும் தள்ளியோ இருக்கையை அமைத்துக் கொள்வதால் கை, முதுவலி ஏற்பட வாய்ப்புண்டு.

பணி புரியும் போது கை - கால்கள், கழுத்து, முதுகை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இருக்கையை விட்டு எழுந்திரிக்காமல் பணி புரிவதைவிட, அரைமணிக்கு ஒருமுறை எழுந்து அங்கும் இங்குமாக நடக்க வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு 'கட்டிப்பிடி' வைத்தியம்!
அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்!
குழந்தைகளின் ஐ.க்யூ.வும் தந்தையின் இருப்பும்!
நரம்பு மண்டல் பாதிப்புகளில் இருந்து விடுபட...
குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை
இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் 'டார்க்' சாக்லெட்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...