|
| வயிறு சம்பந்தமான பிரச்சனையா...? |
முறையான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிற்று வலி போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும். இது, உணவு செல்லும் பாதை முழுவதையும் பாதிக்கும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் உருவானால், சுறுசுறுப்பு நீங்கி சோர்வு ஏற்படும். மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படும். தூக்கம் கெடும். வழக்கமான அலுவலகப் பணிகள் பாதிக்கும்.
அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவது அல்லது தேவையான அளவைவிட குறைவாக சாப்பிடுவது, பாஸ்ட் ஃபுட் உணவு, காலவரையின்றி நினைத்த நேரத்தில் சாப்பிடுவது போன்ற பல்வேறுக் காரணங்களினால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
புகைப் பழக்கம், மது பழக்கம், தக்காளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை நிறைந்த பொருட்களை சாப்பிடுவது, உணவில் அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு சேர்ப்பது, கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
முறையான உணவுமுறை, அடிக்கடி இஞ்சி டீ சாப்பிடுவது, வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை பழக்கப்படுத்துவதன் மூலம் வயிறு கோளாறுகளை குணப்படுத்தலாம்.
அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் இளம் சூடான நீரை அதிகளவில் குடித்து வந்தால், அஜீரணம் நீங்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|