யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
மரணம்... இதை குழந்தைகளுக்கு விவரிக்கும் தருணம்..!
- எஸ்.சரவணன்
குழந்தைகளுக்கு கேள்வியறிவு அதிகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்கும்போது, நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

சினிமா பார்க்கும்போதோ, நிஜ வாழ்க்கையிலோ அல்லது பேசிக்கொண்டிருக்கும்போதோ 'மரணம்' என்ற விஷயத்தை அறிந்துகொண்டு, அதுதொடர்பாக குழந்தைகள் கேள்விக கேட்க நேர்ந்தால், உரிய விளக்கம் தர வேண்டியது அவசியம்.

அத்தகைய சூழலை எதிர்கொண்டு, மரணம் பற்றி விவரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை, அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அளிக்கிறது. அந்த குறிப்புகள் இதோ...

* நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலைக் கருத்தில் கொண்டு விவரிக்க வேண்டும்.

* 'மரணம்' என்ற நிகழ்வு, குழந்தைகள் பலருக்கும் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் சந்தேகம் கேட்டும்போதோ, மரணம் பற்றி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலோ, இயன்ற வரையில் வெளிப்படையாக பதற்றமின்றி பேச வேண்டும்.

* உங்களது அச்சம், துக்கம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைப் பற்றி குழந்தைகளிடம் பேசலாம். அதன்மூலம், இத்தகையை உணர்வுகள் அவர்களுக்கும் (குழந்தைகள்) பொதுவானதும், சாதாரணமானதும் ஆக இருப்பதைக் காண்பிக்க முடியும்.

* 'மரணத்தை எதுவும் செய்ய முடியாது. குழந்தைகளின் அன்றாட செயல்பாட்டின் காரணமாக மரணம் நிகழாது; அது நிகழும்போது, தடுக்க முடியாது' என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வதற்கு உதவ வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'!
தாய்மார்கள் கவனிக்க...
குழந்தையின் நலனுக்காக கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடலாம்!
கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
சரும வறட்சி நீங்க...
மூளைக்கு வலிமை தரும் பொருட்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace