யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
குழந்தையின் நலனுக்காக கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடலாம்!
- சரவணன்
புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 13:40 IST )
பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாக மிகுந்ததாக இருக்க, கர்ப்பிணி தாய்மார்கள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது.

இந்த இனிப்பான தகவல், லண்டனிலுள்ள யேல் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் முடிவைக் கொண்டு தெரிவித்துள்ளனர்.

பிரசவத்துக்கு முன்னால் தாய்மார்கள் சிலருக்கு, வலிப்பு போன்ற நிலை ஏற்படுவதுண்டு. இதற்கு, இரத்தத்தில் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதே காரணம். ப்ரி - எக்லாம்சியா என்றழைக்கப்படும் இந்த பாதிப்பால், பெண்களுக்கு இரத்த அழுத்தம் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும். இதனால், பிறக்கப்போகும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கக்கூடும்.

சாக்லெட்டில் உள்ள தியோமிகல் என்ற ரசாயனப்பொருளிடம், ப்ரி - எக்லாம்சியா பாதிப்பிலிருந்து தாய்மார்களைக் காக்கும் திறன் உள்ளது என யேல் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக, பிரிட்டனின் 'டெய்லி மெயில்' இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் வாரத்துக்கு ஐந்து முறை சாக்லெட் சாப்பிடலாம் என்று அம்மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மொத்தம் 2,291 கர்ப்பிணிப் பெண்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு, இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
சரும வறட்சி நீங்க...
மூளைக்கு வலிமை தரும் பொருட்கள்
வீட்டு வேலை செய்வீர்; மன அழுத்தத்தைப் போக்குவீர்!
நிம்மதியான தூக்கத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய 10 வழிகள்!
பூச்சிகளின் விஷத்தை முறிக்க....
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace