யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
சின்னம்மையை தடுப்பது எப்படி...?
கோடைக்காலங்களில் அதிக வெயில் காரணமாக சின்னம்மை பரவுவது வழக்கம். தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து விட்டதால் விரைவில் சின்னம்மை நோயும் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.

எனவே, சின்னம்மை நோயிலிருந்து தப்பிக்க இப்போதே சில பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது நல்லது.

பொதுவாக சின்னமை நோய் காற்றில் பரவக்கூடியது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே இந்நோய் அதிகம் தாக்குகிறது. கோடைக்காலத்தில் இந்நோய்க்கான வைரஸ் கிருமிகள் பல்கி பெருகுவதால், அது காற்று மூலம் பரவி நோயை உண்டுபண்ணுகிறது.

இந்த நோயை குணப்படுத்த முறையான மருத்துவ முறைகள் இல்லை. இதனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூடநம்பிக்கை காரணமாக வீட்டிலேயே வேப்பிலையை அரைத்து பூசிக்கொண்டு இருப்பர்.

இதன் காரணமாகத்தான், இநோயை தடுக்க குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெக்சி சைக்கிளின், அமாசிலின் புரூபன் வலி தடுப்பு மாத்திரைகள் போன்றவை கொடுக்கப்படுகின்றன.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும், எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களையும் கொடுக்க வேண்டும். இளநீர், பழ ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இது ஒரு தொற்றுநோய் என்பதால், உடனிருந்து கவனிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கு...
தொற்றுநோய்களை தடுக்கும் வேப்பம்பழம்
வயதான பெண்களுக்கு புரதச்சத்து அவசியம்!
பற்கள் உறுதியாக இருக்க...
தீக்காயத்துக்கு முதலுதவி
குழந்தை ஏன் அழுகிறது...?
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...