யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
உடல் பருமனைத் தவிர்க்க தூக்கம் அவசியம்!
- எஸ்.சரவணன்
உடல் பருமனைத் தவிர்ப்பதற்கும், உடல் மெலிவதற்கும் சிலர் தங்களது தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள முனைகின்றனர்.

ஆனால், இது தவறான வழிமுறையாகும். அதிகமாக தூங்கினால், உடல் எடை அதிகரிக்கும் என்பது மிகவும் தவறான எண்ணம். மாறாக, நாளொன்றுக்குப் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால்தான் உடல் பருமனாகிறது.

இதுதொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் உடல் அதிக அளவில் பருமனடைகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இத்தகையோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் அதிக அளவில் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

போதுமான கால நேரத்தில் தூங்கவில்லை என்பதால், வழக்கத்துக்கும் அதிகமாக பசி எடுக்கிறது. அதன் காரணமாக உணவின் அளவு அதிகரிப்பதோடு, அவ்வப்போது நொறுக்குத் தீனிகளையும் அதிகமாக புசிக்க நேர்கிறது.

இதைத் தவிர்ப்பதற்கு, தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கால் நகங்கள் உடைவதை தவிர்க்கலாம்!
முட்டையும், பலன்களும்.....
தலையில் நீர் கோர்த்தால்....
ரத்த சோகை ஏற்படமால் தடுக்க உதவும் உணவுமுறை
உடல் பருமனாகாமல் தடுக்க காலை உணவு உண்பீர்!
சோர்வைப் போக்க எளிய உடற்பயிற்சிகளை செய்வீர்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...