|
| முட்டையும், பலன்களும்..... |
குறைந்த செலவில் அதிக சத்துக்கள் கொண்ட ஒரு உணவுப்பொருள் முட்டை எனலாம்.
முட்டைகளில் 'ஏ' மற்றும் 'பி' வைட்டமின்கள் உள்ளன. இவை முக்கிய உயிர்ச்சத்துக்கள் ஆகும். அதோடு, தசை வளர்க்கும் பொருட்களும், கொழுப்புப் பொருட்களும் முட்டையில் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் முக்கிய உணவுப்பொருள் இது.
வெள்ளை நிறத்திலான ஓடுகளை கொண்ட முட்டைகளை விட, பழுப்பு நிறமுள்ள ஓடுகள் கொண்ட முட்டைகளே அதிக சத்துக்களை கொண்டிருக்கும்.
முட்டை வகைகளில், கோழிமுட்டை, வாத்து முட்டை மற்றும் புறா முட்டை ஆகியவையே பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கோழி முட்டை:
இதில் பல முக்கியச் சத்துக்கள் உள்ளன. இதை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தாது பலப்படும். தேகம் வலுவடையும். இரத்த செல்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
இதை அதிக நேரம் வேகவைத்தால் கெட்டியாகி, ஜீரணக்கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்பதே பலனளிக்கும்.
வாத்து முட்டை:
உடலுக்கு வலு சேர்க்கும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு உடல் பருக்கும். இது வாயுவை உற்பத்தி செய்வதால், இஞ்சி, கொத்துமல்லி மற்றும் சீரகம் ஆகியவை சேர்த்து சமைப்பது நலம்.
புறா முட்டை:
தேகம் பொலிவு பெறும். தாது பலம் பெறும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|